செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

குரங்கு... குல்லா.... ரீமிக்ஸ்...



குரங்கு... குல்லா.... ரீமிக்ஸ்...


இன்று ஒரு கதை. எல்லோரும் ஏற்கனவே படித்துதான். குல்லா விற்பவன் தன்னிடமுள்ள குல்லாக்களை குரங்கிடம் இழந்ததும், பின் அவற்றை தந்திரமாக மீட்டதும் உங்களுக்குத் தெரியும்.


இப்போது அந்த குல்லா விற்பவனின் பேரன் குல்லா விற்பதற்கு வந்தான். அதே இடத்தில் அதே போல் ஒரு குரங்கிடம் மாட்டிக்கொண்டான். அந்த குரங்கு அனைத்து குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. அவனுக்கு தன் தாத்தா சொன்ன தந்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அதே போல் தன்னிடமுள்ள குல்லாவை வைத்து என்னென்ன செய்தானோ அதையெல்லாம் அந்த குரங்கும் செய்தது. கடைசியாக அவன் அந்த குல்லாவை தூக்கி ரோட்டில் எறிந்தான். ஆனால் அந்த குரங்கு அப்படி செய்யாமல் அமைதியாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியம். அவன் அந் குரங்கிடம் ஏனென்று காரணம் கேட்டபோது அந்த குரங்கு சொன்ன பதில் "உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்கிறார்களா?". அவன் சோகமாக வீடு திரும்பினான்.


1 கருத்து:

சிவக்குமரன் சொன்னது…

please do the changes in comment settings.
settings-comments>

comment form placement-full page

comment moderation-never


show word verification for comments-No

this will help you to get more commets