செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

வார்த்தை விளையாட்டு!

சமீபத்தில் செய்தித்தாள்களில் அரசியல்வாதிகள் அடிக்கடி பயன்படுத்தும் சில வார்த்தைகளை படிக்க நேர்ந்தது. அவற்றை படித்தால் எரிச்சலோ எரிச்சல். இதோ சில!
  • விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
  • அரசின் பரிசீலனையில் உள்ளது.
  • திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
  • உரிய நேரத்தில் செய்யப்படும்.
  • அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலே கண்டவை மிகச்சிலதான். இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு உரையாடல் இதோ!

புதுவை சட்டசபையில் உறுப்பினரின் கேள்வி : கால்நடைத்துறை உயரதிகாரி அரசு பணத்தை கையாடல் செய்ததில் அரசின் நடவடிக்கை என்ன?

அமைச்சர் : அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உறுபபினர் : என்ன விதமான நடவடிக்கை?

அமைச்சர் : இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உறுபபினர் : அவர் மீண்டும் வேளையில் சேர்ந்துவிட்டார்.

அமைச்சர் : சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

உறுப்பினர் : பணத்தை மீட்க அரசு என்ன செய்தது?

அமைச்சர் : பணத்தை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது.

இந்த உரையாடல் இதே போல் நீண்டுகொண்டு செல்கிறது. இவற்றிலிருந்து உங்களால் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது? மக்கள் அனைவரும் `புன்னகை மன்னர்கள்'. என்ன சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் எங்கும் உள்ள இந்த மாதிரியான அரசியல்வாதிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சனி, 22 ஆகஸ்ட், 2009

நான் யார் தெரியுமா?

படத்தில் இருக்கும் குணசித்திர வித்வான் பெயர் கண்டுபிடிப்பவர்க்கு பரிசு .... அவருடன் ஒரு நாள் மதிய உணவு அவருடைய வீட்டில்!


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பார்த்தேன்... ரசித்தேன்...

இப்படியே போனால் எப்போது சென்று சேர்வது? தயக்கம் ஏன்? இன்னும் இரண்டு படிகள்தான்..

ஜன்னலுக்கு வெளியே வா! உலகம் உனக்காகத்தான்!

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

குரங்கு... குல்லா.... ரீமிக்ஸ்...



குரங்கு... குல்லா.... ரீமிக்ஸ்...


இன்று ஒரு கதை. எல்லோரும் ஏற்கனவே படித்துதான். குல்லா விற்பவன் தன்னிடமுள்ள குல்லாக்களை குரங்கிடம் இழந்ததும், பின் அவற்றை தந்திரமாக மீட்டதும் உங்களுக்குத் தெரியும்.


இப்போது அந்த குல்லா விற்பவனின் பேரன் குல்லா விற்பதற்கு வந்தான். அதே இடத்தில் அதே போல் ஒரு குரங்கிடம் மாட்டிக்கொண்டான். அந்த குரங்கு அனைத்து குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. அவனுக்கு தன் தாத்தா சொன்ன தந்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அதே போல் தன்னிடமுள்ள குல்லாவை வைத்து என்னென்ன செய்தானோ அதையெல்லாம் அந்த குரங்கும் செய்தது. கடைசியாக அவன் அந்த குல்லாவை தூக்கி ரோட்டில் எறிந்தான். ஆனால் அந்த குரங்கு அப்படி செய்யாமல் அமைதியாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியம். அவன் அந் குரங்கிடம் ஏனென்று காரணம் கேட்டபோது அந்த குரங்கு சொன்ன பதில் "உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்கிறார்களா?". அவன் சோகமாக வீடு திரும்பினான்.


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

கண்டதெல்லாம் கனவு மட்டுமே



கண்டதெல்லாம் கனவாகவே போயிற்று !


இந்தப்படத்திற்கு விளக்கம் தேவையில்லை என எண்ணுகிறேன் !


புதன், 12 ஆகஸ்ட், 2009


ஆ! ஆ! ஆங்கிலம்!

ஆங்கிலம் தெரியாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் என்ன ஆகும்? இதோ இப்படித்தான் ஆகும்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஆயிரமாயிரம் !





ஒன்றா! இரண்டா! ஆயிரமாயிரம்!


ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கையின்படி ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்களை எச்சரித்துள்ளது. 2AQ, 8AC சீரியல் உள்ள எண்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நண்பர்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க நானும் வேண்டுகிறேன்.

வருமுன் காப்போம் - வந்தபின்..? விரட்டுவோம் !


வருமுன் காப்போம்! வந்தால் ... விரட்டுவோம் !

ஸ்வைன் ப்ளூ - இந்தியாவிற்கு புதிய வரவு ! முதலில் நோயாக பரவ ஆரம்பித்தது இப்போது பலி வாங்க ஆரம்பித்துவிட்டது. இந்த நோயிலிருந்து எப்படி தப்பிப்பது? வந்தபின் என்ன சிகிச்சை? இதோ சில அறிகுறிகள் !


திங்கள், 10 ஆகஸ்ட், 2009