வெள்ளி, 18 டிசம்பர், 2009
புதன், 18 நவம்பர், 2009
புதன், 16 செப்டம்பர், 2009
நாளை மற்றுமொரு நாளே!
புதன், 2 செப்டம்பர், 2009
உட்கார்ந்து யோசிப்பானோ!
திங்கள்:
"டேய்! ஸ்கூலுக்கு கிளம்பிட்டியாடா!"
"அப்பா! வண்டியில் போகும்போது பையில் இருக்கும் பென்சில் உடைஞ்சிதுன்னா எழுத முடியாதுப்பா! அதனால் இன்னிக்கு ஸ்கூல் போகலைப்பா!"
"பென்சில் உடைஞ்சிதுன்ன வேறு புது பென்சில் வாங்கித்தரேன்! இப்ப ஸ்கூலுக்கு கிளம்பு!"
"இல்லப்பா! பென்சில் ஹூக் உடைஞ்சிதுன்ன மிஸ் அடிப்பாங்க! நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்!"
***********************
செவ்வாய்
"கிரி! ஸ்கூலுக்கு நேரம் ஆச்சி! கிளம்பு!"
"அப்பா! பையில் ஜிப் கிழிஞ்சிட்டுது! நான் ஸ்கூலுக்கு போகலைப்பா!"
"நான் சாயந்திரம் வேறு பை வாங்கி தருகிறேன். நீ இப்ப கிளம்பு."
"என்னப்பா நீ ! ஜிப் திறந்திருக்கும்போது புக்கெல்லாம் கீழ விழுந்துடாதா! நான் ஒன்னும் ஸ்கூலுக்கு போகலை!"
*******************
புதன்:
"அப்பா! நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன். இன்னிக்கு என்ன டிபன்?"
"இன்னிக்கு இட்லி "
"அப்படின்னா மதியம் லஞ்ச்க்கு ?"
"அதே இட்லிதான். இல்லன்னா சாதம் எடுத்துட்டு போ!"
"நீ என்ன தினமும் இட்லியும், சாதமும் எடுத்துட்டு போக சொல்ற! இன்னிக்கு அம்மாவை பூரி செஞ்சி தர சொல்லு!"
"பூரி செய்ய டைம் இல்ல! நாளைக்கு பார்க்கலாம். நீ இப்ப கிளம்பு!"
"பூரி இல்லன்னா நான் ஸ்கூலுக்கு கிளம்ப மாட்டேன்."
***************
வியாழன்
"கிரி! மணி எட்டு ஆச்சி! சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு!"
"அப்பா! நான் இன்னும் ஹோம் வொர்க் எழுதவில்லைப்பா! எழுதிட்டு அப்புறம் போறேன்."
"நான் வந்து மிஸ்-கிட்ட சொல்றேன். நீ கிளம்பு!"
"எழுதாம போனா மிஸ் அடிப்பாங்க! நான் போகலைப்பா!"
*****************
வெள்ளி
"கிரி! எழுந்திரு! அண்ணன் கிளம்பிட்டான். நீயும் கிளம்பு."
"அப்பா! இன்னிக்கு நாம எந்த வண்டியில போறோம்? தாத்தா வண்டியிலா? உன் வண்டியிலா?"
"என் வண்டியில்தான்"
"நான் இன்னிக்கு தாத்தா வண்டியில்தான் வருவேன்"
"தாத்தா வண்டியில் வெளியில் போயிருக்கிறார். வர நேரமாகும்."
"நான் தாத்தா வந்தபிறகு ஸ்கூலுக்கு போறேன். நீ போ!"
******************
சனி
"கிரி! மணி ஏழுதான் ஆச்சி! அதுக்குள்ள எழுந்துட்ட! நல்ல பையன்! சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்பு!"
"அப்பா! உனக்கு தெரியாதா! நேத்து மிஸ் என்ன சொன்னாங்க தெரியுமா? டூ டேஸ் ஹாலிடேஸ் "
****************
இப்போது என்னுடைய யோசனை எல்லாம், இவன் மறுபடியும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்தால் எப்படி சமாளிக்கலாம் என்பதுதான்! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
வார்த்தை விளையாட்டு!
- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
- அரசின் பரிசீலனையில் உள்ளது.
- திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
- உரிய நேரத்தில் செய்யப்படும்.
- அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலே கண்டவை மிகச்சிலதான். இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு உரையாடல் இதோ!
புதுவை சட்டசபையில் உறுப்பினரின் கேள்வி : கால்நடைத்துறை உயரதிகாரி அரசு பணத்தை கையாடல் செய்ததில் அரசின் நடவடிக்கை என்ன?
அமைச்சர் : அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உறுபபினர் : என்ன விதமான நடவடிக்கை?
அமைச்சர் : இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உறுபபினர் : அவர் மீண்டும் வேளையில் சேர்ந்துவிட்டார்.
அமைச்சர் : சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
உறுப்பினர் : பணத்தை மீட்க அரசு என்ன செய்தது?
அமைச்சர் : பணத்தை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது.
இந்த உரையாடல் இதே போல் நீண்டுகொண்டு செல்கிறது. இவற்றிலிருந்து உங்களால் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது? மக்கள் அனைவரும் `புன்னகை மன்னர்கள்'. என்ன சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் எங்கும் உள்ள இந்த மாதிரியான அரசியல்வாதிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சனி, 22 ஆகஸ்ட், 2009
நான் யார் தெரியுமா?
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
பார்த்தேன்... ரசித்தேன்...
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
குரங்கு... குல்லா.... ரீமிக்ஸ்...
குரங்கு... குல்லா.... ரீமிக்ஸ்...
இன்று ஒரு கதை. எல்லோரும் ஏற்கனவே படித்துதான். குல்லா விற்பவன் தன்னிடமுள்ள குல்லாக்களை குரங்கிடம் இழந்ததும், பின் அவற்றை தந்திரமாக மீட்டதும் உங்களுக்குத் தெரியும்.
இப்போது அந்த குல்லா விற்பவனின் பேரன் குல்லா விற்பதற்கு வந்தான். அதே இடத்தில் அதே போல் ஒரு குரங்கிடம் மாட்டிக்கொண்டான். அந்த குரங்கு அனைத்து குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. அவனுக்கு தன் தாத்தா சொன்ன தந்திரம் ஞாபகத்துக்கு வந்தது. அதே போல் தன்னிடமுள்ள குல்லாவை வைத்து என்னென்ன செய்தானோ அதையெல்லாம் அந்த குரங்கும் செய்தது. கடைசியாக அவன் அந்த குல்லாவை தூக்கி ரோட்டில் எறிந்தான். ஆனால் அந்த குரங்கு அப்படி செய்யாமல் அமைதியாக இருந்தது. அவனுக்கு ஆச்சரியம். அவன் அந்த குரங்கிடம் ஏனென்று காரணம் கேட்டபோது அந்த குரங்கு சொன்ன பதில் "உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்கிறார்களா?". அவன் சோகமாக வீடு திரும்பினான்.
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
ஆயிரமாயிரம் !
ஒன்றா! இரண்டா! ஆயிரமாயிரம்!
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கையின்படி ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்களை எச்சரித்துள்ளது. 2AQ, 8AC சீரியல் உள்ள எண்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நண்பர்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க நானும் வேண்டுகிறேன்.