புதன், 16 செப்டம்பர், 2009

நாளை மற்றுமொரு நாளே!

நேற்று எனது சகோதரனும் சகோதரியும் அலைபேசியில் பேசும்போது எனது திருமண நாள் கொண்டாட்டங்களை விசாரித்தார்கள். அப்போதுதான் எனது நினைவுக்கு வந்தது எனது திருமண நாள் செப்டம்பர் பதின்மூன்று அன்று கடந்துவிட்டது என்று. எப்படி மறந்தேன்? இதில் வேடிக்கை என்னவென்றால் நான் மறந்தாலும், மறக்காத எனது துணைவியும் அந்த நாளை மறந்துதான். சரி போகட்டும். என்ன பெரிதாக கொண்டாடியிருக்க போகிறோம்? ஏதாவது கோயிலுக்கு சென்று, கடைக்கு சென்று ஏதாவது பரிசு வாங்கி கொடுத்துவிட்டு அதோடு முடிந்து போயிருக்கும். சரி, மறுபடியும் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வரும். பதின்மூன்றாம் தேதியும் வரும். அப்போது கொண்டாடி சந்தோஷப்படுவோம் என சமாதனமான எங்கள் மனம் தினசரி வாழ்க்கையில் கலந்தது. நாளை மற்றுமொரு நாளே!

கருத்துகள் இல்லை: