- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
- அரசின் பரிசீலனையில் உள்ளது.
- திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
- உரிய நேரத்தில் செய்யப்படும்.
- அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலே கண்டவை மிகச்சிலதான். இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு உரையாடல் இதோ!
புதுவை சட்டசபையில் உறுப்பினரின் கேள்வி : கால்நடைத்துறை உயரதிகாரி அரசு பணத்தை கையாடல் செய்ததில் அரசின் நடவடிக்கை என்ன?
அமைச்சர் : அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உறுபபினர் : என்ன விதமான நடவடிக்கை?
அமைச்சர் : இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உறுபபினர் : அவர் மீண்டும் வேளையில் சேர்ந்துவிட்டார்.
அமைச்சர் : சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
உறுப்பினர் : பணத்தை மீட்க அரசு என்ன செய்தது?
அமைச்சர் : பணத்தை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது.
இந்த உரையாடல் இதே போல் நீண்டுகொண்டு செல்கிறது. இவற்றிலிருந்து உங்களால் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது? மக்கள் அனைவரும் `புன்னகை மன்னர்கள்'. என்ன சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் எங்கும் உள்ள இந்த மாதிரியான அரசியல்வாதிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?