வியாழன், 6 மே, 2010

அப்பா! ஒரு கவிதை!

அப்பா! ஒரு கவிதை!
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா!
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு.

நன்றி : நவீன் பிரகாஷ்

புதன், 18 நவம்பர், 2009

கற்பனை என்றாலும் நிஜமே!

கற்பனை என்றாலும் நிஜமே!

தனியார் கம்பனியில் வேலை செய்பவர்களை பற்றிய சில கார்டூன்கள், வலையில் உலா வந்த போது காண நேர்ந்தது. ரசித்தேன். அவற்றில் சில....





புதன், 16 செப்டம்பர், 2009

நாளை மற்றுமொரு நாளே!

நேற்று எனது சகோதரனும் சகோதரியும் அலைபேசியில் பேசும்போது எனது திருமண நாள் கொண்டாட்டங்களை விசாரித்தார்கள். அப்போதுதான் எனது நினைவுக்கு வந்தது எனது திருமண நாள் செப்டம்பர் பதின்மூன்று அன்று கடந்துவிட்டது என்று. எப்படி மறந்தேன்? இதில் வேடிக்கை என்னவென்றால் நான் மறந்தாலும், மறக்காத எனது துணைவியும் அந்த நாளை மறந்துதான். சரி போகட்டும். என்ன பெரிதாக கொண்டாடியிருக்க போகிறோம்? ஏதாவது கோயிலுக்கு சென்று, கடைக்கு சென்று ஏதாவது பரிசு வாங்கி கொடுத்துவிட்டு அதோடு முடிந்து போயிருக்கும். சரி, மறுபடியும் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வரும். பதின்மூன்றாம் தேதியும் வரும். அப்போது கொண்டாடி சந்தோஷப்படுவோம் என சமாதனமான எங்கள் மனம் தினசரி வாழ்க்கையில் கலந்தது. நாளை மற்றுமொரு நாளே!

புதன், 2 செப்டம்பர், 2009

உட்கார்ந்து யோசிப்பானோ!

எனக்கும் யு.கே.ஜி. படிக்கும் என் மகனுக்கும் சென்ற வாரத்தில் நடந்த உரையாடல்:
திங்கள்:
"டேய்! ஸ்கூலுக்கு கிளம்பிட்டியாடா!"
"அப்பா! வண்டியில் போகும்போது பையில் இருக்கும் பென்சில் உடைஞ்சிதுன்னா எழுத முடியாதுப்பா! அதனால் இன்னிக்கு ஸ்கூல் போகலைப்பா!"
"பென்சில் உடைஞ்சிதுன்ன வேறு புது பென்சில் வாங்கித்தரேன்! இப்ப ஸ்கூலுக்கு கிளம்பு!"
"இல்லப்பா! பென்சில் ஹூக் உடைஞ்சிதுன்ன மிஸ் அடிப்பாங்க! நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்!"
***********************
செவ்வாய்
"கிரி! ஸ்கூலுக்கு நேரம் ஆச்சி! கிளம்பு!"
"அப்பா! பையில் ஜிப் கிழிஞ்சிட்டுது! நான் ஸ்கூலுக்கு போகலைப்பா!"
"நான் சாயந்திரம் வேறு பை வாங்கி தருகிறேன். நீ இப்ப கிளம்பு."

"என்னப்பா நீ ! ஜிப் திறந்திருக்கும்போது புக்கெல்லாம் கீழ விழுந்துடாதா! நான் ஒன்னும் ஸ்கூலுக்கு போகலை!"
*******************
புதன்:
"அப்பா! நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன். இன்னிக்கு என்ன டிபன்?"
"இன்னிக்கு இட்லி "
"அப்படின்னா மதியம் லஞ்ச்க்கு ?"
"அதே இட்லிதான். இல்லன்னா சாதம் எடுத்துட்டு போ!"
"நீ என்ன தினமும் இட்லியும், சாதமும் எடுத்துட்டு போக சொல்ற! இன்னிக்கு அம்மாவை பூரி செஞ்சி தர சொல்லு!"
"பூரி செய்ய டைம் இல்ல! நாளைக்கு பார்க்கலாம். நீ இப்ப கிளம்பு!"
"பூரி இல்லன்னா நான் ஸ்கூலுக்கு கிளம்ப மாட்டேன்."
***************
வியாழன்
"கிரி! மணி எட்டு ஆச்சி! சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு!"
"அப்பா! நான் இன்னும் ஹோம் வொர்க் எழுதவில்லைப்பா! எழுதிட்டு அப்புறம் போறேன்."
"நான் வந்து மிஸ்-கிட்ட சொல்றேன். நீ கிளம்பு!"
"எழுதாம போனா மிஸ் அடிப்பாங்க! நான் போகலைப்பா!"
*****************
வெள்ளி
"கிரி! எழுந்திரு! அண்ணன் கிளம்பிட்டான். நீயும் கிளம்பு."
"அப்பா! இன்னிக்கு நாம எந்த வண்டியில போறோம்? தாத்தா வண்டியிலா? உன் வண்டியிலா?"
"என் வண்டியில்தான்"
"நான் இன்னிக்கு தாத்தா வண்டியில்தான் வருவேன்"
"தாத்தா வண்டியில் வெளியில் போயிருக்கிறார். வர நேரமாகும்."
"நான் தாத்தா வந்தபிறகு ஸ்கூலுக்கு போறேன். நீ போ!"
******************
சனி
"கிரி! மணி ஏழுதான் ஆச்சி! அதுக்குள்ள எழுந்துட்ட! நல்ல பையன்! சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்பு!"
"அப்பா! உனக்கு தெரியாதா! நேத்து மிஸ் என்ன சொன்னாங்க தெரியுமா? டூ டேஸ் ஹாலிடேஸ் "
****************
இப்போது என்னுடைய யோசனை எல்லாம், இவன் மறுபடியும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்தால் எப்படி சமாளிக்கலாம் என்பதுதான்! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!